மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இளநிலை ‘கியூட்’ தேர்வு இன்று தொடக்கம்

2026-ம் ஆண்டிற்கான 'கியூட்' தேர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் 31-ந்தேதி வரை நடக்கிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இளநிலை ‘கியூட்’ தேர்வு இன்று தொடக்கம்
Published on

திருச்சி,

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர 'கியூட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 'கியூட்' தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, 2026-ம் ஆண்டிற்கான 'கியூட்' தேர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நுழைவுத்தேர்வுக்காக நாடு முழுவதும் திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விவரங்களை உள்நுழைத்து 'கியூட்' (யுஜி)-2026 ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து மாணவர்களும் அடையாள சான்றாக இணைய வழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த புகைப்பட அடையாள அட்டையை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், தேசிய தேர்வு முகமையை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com