குரூப் 2 தேர்வர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 தேர்வர்களுக்கு வரும் 22 முதல் 24-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 2 தேர்வர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

குரூப் 2 தேர்வில் பங்கேற்றவர்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் நேற்று முன் தினம் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 22 முதல் 24-ம் தேதி வரை, சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும். இதற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான நாள், நேரம், இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்த விவரம் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வர்களுக்கு அனுப்பப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com