டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு: 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி அன்று வெளி​யிடப்பட்டது.

காலியிடங்கள் விவரம்

அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர்-7, டெபுடி கமர்ஷியல் டேக்ஸ் ஆபீசர்-1, ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபீசர்-1, புரபேஷன் ஆபீசர்-5, சப்-ரிஜிஸ்டிரார் (கிரேடு)-II-3, ஜெயிலர் (ஆண்)-3, ஜெயிலர் (ஸ்பெஷல் பெர்சன் பார் வுமன்)-1, ஸ்பெஷல் அசிஸ்டென்ட்-2, ஸ்பெஷல் பிராஞ்ச் அசிஸ்டென்ட்-8, ஸ்டோர்கீப்பர்-5, அசிஸ்டென்ட் செக்‌ஷன் ஆபீசர்-9, சீனியர் இன்ஸ்பெக்டர்-9, ஆடிட் இன்ஸ்பெக்டர்-5, கைத்தறி இன்ஸ்பெக்டர்-3, சூபர்வைசர் / இளநிலை கண்காணிப்பாளர்-7, சீனியர் ரெவினியூ இன்ஸ்பெக்டர்-4, அசிஸ்டென்ட்-686, அக்கவுன்டென்ட்-31,எக்சிக்யூட்டிவ் ஆபீசர் கிரேடு-III-9, எக்சிக்யூட்டிவ் ஆபீசர் கிரேடு-II-1, ஜூனியர் அக்கவுன்டென்ட், ஆண் வார்டன், லோயர் டிவிசன் கிளார்க்-20.

கல்வித்தகுதி

1. அசிஸ்டென்ட் செக்‌ஷன் ஆபீசர்: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஜெனரல் லா பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருப்பவர்கள் அல்லது ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2. சப்- ரிஜிஸ்டிரார் கிரேடு-II. ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பிஎல் பட்டம் பெற்றிருப்பது, விரும்பத்தக்கது.

3. ஸ்பெஷல் பிராஞ்ச் அசிஸ்டென்ட்: ஏதொவதொரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங் படித்திருப்பது, விரும்பத்தக்கது.

4. மற்ற பணிகளுக்கு: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயது: பொதுப்பிரிவினர் 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். பொதுப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி/ அருந்ததியர்/எஸ்டி/ பிற்பட்டோர்/சீர்மரபினர்/ முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வு பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும். பிரிலிமினரி தேர்வு நவ.1ம் தேதி நடைபெறும். இதில் பொது அறிவு, கணித அறிவு மற்றும் தமிழ் அல்லது ஆங்கில மொழி தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு கேள்விகள் பட்டப்படிப்பு தரத்திலும், மொழித்திறன் தொடர்பான கேள்விகள் 10ம் வகுப்பு தரத்திலும் கேட்கப்படும். பிரிலிமினரி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தேர்வுக் கட்டணம்

முதல் நிலை தேர்வுக்கு மட்டும் ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.

www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 09.09.2026.

X

Daily Thanthi
www.dailythanthi.com