

சென்னை,
இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு ஆகும்.
பணியிடங்கள் விவரம்:
வி.ஏஓ: 215
இளநிலை உதவியாளர்: 1678
இளநிலை வருவாய் ஆய்வாளர்: 239
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்: 01
தட்டச்சர் (டைப்பிஸ்ட்) ; 1099
வனக்காப்பாளர்; 62
என 25 வகையான பணிகளில் 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/