குரூப்-1 பதவிகளுக்கான காலி இடங்கள் அதிகரிப்பு-டி.என்.பி.எஸ்.சி

கூடுதலாக 20 இடங்களை அதிகரித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 12 துணை ஆட்சியர், 2 வணிக வரி உதவி ஆணையர், 3 கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், 8 தமிழ்நாடு பதிவு பணி மாவட்ட பதிவாளர், ஒரு தொழிலாளர் உதவி ஆணையர் என 26 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.

கடந்த மாதம் (ஜூலை) 29-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. பலரும் அதற்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 20 இடங்களை அதிகரித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.

முதல்நிலை தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 6- ந் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தக்கட்டமாக முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதேபோல் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்கள் குறைவாக இருப்பதாக சொல்லப்படும் சூழலில் அதையும் டி.என்.பி.எஸ்.சி. அதிகரிக்குமா? என்ற கோரிக்கையை விண்ணப்பதாரர்கள் முன்வைத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com