டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு
Published on

சென்னை,

மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள சார்பதிவாளர், இளநிலை உதவியாளர், வனவர் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்களை நிரப்ப, குரூப் 2, 2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான (குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ) அறிவிக்கை கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

இந்நிலையில், குரூப் 2, 2ஏ பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் மேலும் 625 அதிகரிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 2025-26ம் ஆண்டில் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான 1,270 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசுத்துறை/நிறுவனங்களிடம் இருந்து காலிப்பணியிடங்கள் அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் மேலும் உயர்த்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com