டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
Published on

சென்னை,

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.11/2025 நாள் 15.07.2025-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் 22.12.2025 அன்று வெளியிடப்பட்டது.

இதில், தொகுதி-II-A பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தாள்-II பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு (கொள்குறி வகை) தேர்வானது 15.03.2026 மு.ப மற்றும் தொகுதி-II (ம) IIA பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தாள்-I தமிழ் தகுதித் தேர்வானது 15.03.2026 பி.ப நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவுத் தளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com