மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்‌ தேர்வு (தொழிற்பயிற்சி நிலை) 2025 குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் வாரியத்தில் கள உதவியாளர் வேலைக்கு 1794 காலி இடங்களுக்கு போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு இன்று முதல், அக். 2ஆம் தேதி வரை இரண்டாம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள ௧ள உதவியாளர் பதவிக்கான 1794 காலிப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை)- 11க்கான அறிவிக்கை இன்று (03.09.2025) வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள் 03.09.2025 முதல் 02.10.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அக்டோபர் 6 முதல் 8ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும் யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.18,800 - ரூ.59,900 என்ற அளவில் வழங்கப்படும்.  

இந்தத் தேர்வு நவம்பர் மாதத்தில் நடக்கிறது. 16.11.2025 முற்பகல் மற்றும் பிற்பகலில் கணினி மூலம் இந்தத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய குழுமத்தினால் வழங்கப்படும் பின்வரும் ஏதேனும் ஒரு தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்றிதழ்/ தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.மின் பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது சிறப்புத் திட்டத்தின்கீழ் மின்னியல் தொழில் பிரிவு படித்தவர்கள் விண்ணப்பிக்காலம்.

https://tnpsc.gov.in/Document/tamil/13_2025_CTS_II_DIPLOMA_TAMIL_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, அறிவிக்கையைக் காணலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com