டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணி தேர்வு; 461 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

டிஎன்பிஎஸ்சி 461 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணி தேர்வு; 461 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான டிஎன்பிஎஸ்சி 461 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:

பதவியின் பெயர்: தொழில்நுட்ப பணிகள் CTSE (நேர்முகத் தேர்வு அல்லாதது)

கல்வித்தகுதி: பி இ/ பிடெக், பிஎஸ்சி, பி.ஆர்க். எம்.பிஏ, எல்.எல்.பி, எம்.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 01.07.2026 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, பி.சி.எம் பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்: எழுத்துத் தேர்வு ரூ.100, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, பி.சி.எம் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? www.tnpsc.gov.inஎன்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.06.2026

தேர்வு அறிவிப்பை படிக்க:

https://tnpsc.gov.in/document/english/CTS(Non%20Interview)%20English%20Final_.pdf

X

Daily Thanthi
www.dailythanthi.com