எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
Published on

சென்னை,

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 5 ஆயிரத்து 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர தனியார் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9 ஆயிரத்து 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

பி.டி.எஸ். படிப்பை பொறுத்தவரையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 900 இடங்களும் உள்ளன. இந்த சூழலில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற்றது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட காலஅவகாசம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் கடைசி நேர பதற்றத்தை தணிக்க, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com