டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

டெட் தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது.
டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வை அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இத்தேர்வை எழுத விரும்புகிறவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இன்றே (செப்டம்பர் 7) கடைசி நாள் ஆகும். இதற்கான தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இடைநிலை ஆசிரியர்களும், பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களும் https://trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெறும் இறுதி ஆண்டு மாணவர்கள், பி.எட். இறுதி ஆண்டு படிப்பவர்களும் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. எனவே, ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com