என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

என்ஜினீயரிங் படிப்புக்காக இதுவரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் மே 7-ந்தேதி தொடங்கியது. இதுவரை, 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணபித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. ஜூன் 4-ந்தேதி (நேற்று) மாலை 6மணி நிலவரப்படி, 2 லட்சத்து 90 ஆயிரத்து 678 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 337 மாணவர்கள், 1 லட்சத்து 5 ஆயிரத்து 395 மாணவிகள் என மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 732 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், நாளைக்குள் (வெள்ளிகிழமை) ww.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com