நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சி பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?

என்.எல்.சி நிறுவ்னத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப உள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சி பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?
Published on

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். என்.எல்.சி நிறுவனத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன என்பது பற்றி பின்வருமாறு:

பணி நிறுவனம் : என்.எல்.சி

மெக்கானிக், சிவில், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பிரிவில் கிராஜூவேட், டெக்னீசியன் அப்ரென்டிஸ் பணியில் மொத்தம் 575 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ

தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பத்தை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Office of The General Manager, Learning and Development Centre, Block- 20, NLC India Limited, Neyveli - 607 803.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.01.2026

கூடுதல் விவரங்களுக்கு: nlcindia.in

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com