ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி

ஏற்றுமதி-இறக்குமதி பற்றிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்புகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.
ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி
Published on

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்ககளையும் குறித்த 4 நாட்கள் பயிற்சி வரும் 19.03.2025 முதல் 22.03.2025 தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் மாவட்டம்.

இப்பயிற்சியில் ஏற்றுமதி சர்வதேச வர்த்தகத்தின் அடிப்படைகள், சந்தையின் தேவை, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், உரிமம் நடைமுறை குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் பற்றியும் விளக்கப்படும். அத்துடன் நேரடியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்று பார்வையிடுதல் மற்றும் வேர் ஹவுஸ் பேக்கிங் ஷிப்பிங் நடைமுறைகள் நேரடியாக பயிற்சி வழங்கப்படும்

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது : 9566849767/ 90806 09808

அரசு சான்றிதழ் வழங்கப்படும் முன்பதிவு அவசியம்: www.editn.in

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com