தமிழக அரசு சார்பில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த இரண்டு நாள் பயிற்சி

பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசு சார்பில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த இரண்டு நாள் பயிற்சி
Published on

சென்னை,

மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த இரண்டு நாள் பயிற்சி வழங்குவது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், "தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பட்டறை" பயிற்சி வரும் 28.05.2025 முதல் 29.05.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சிப் பட்டறையின் முக்கிய மதிப்பு முன்மொழிவுகள்:

* வணிக சந்தைப்படுத்துதலின் அடிப்படைகள்

* வளர்ச்சிக்கான அலகு பொருளாதாரம்

* முக்கிய அளவீடுகளைப் புரிந்துகொள்ளுதல்

* அதிக மாற்றும் சந்தைப்படுத்துதல் புனலை உருவாக்குதல்

* டிஜிட்டல் சந்தைப்படுத்துதலின் இரகசியங்கள்

* வெற்றிக்கான தந்திரங்கள் மற்றும் கருவிகள்

* குறிப்புக்கான நிகழ்வு ஆய்வுகள்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்:

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோவில் தெரு, இ.டி.ஐ.ஐ. அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032, கைபேசி எண்கள்: 9543773337 / 9360221280.

முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com