சென்னையில் கிராம உதவியாளர் பணியிடங்கள்; 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்த பணியிடங்களுக்கு தமிழில் தெளிவாகப் படிக்கவும் எழுதவும் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
சென்னையில் கிராம உதவியாளர் பணியிடங்கள்; 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை,

சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள 20 கிராம உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன.

சென்னை மாவட்ட வருவாய் அலகின் கீழ், வருவாய் வட்டம் வாரியாக மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒவ்வொரு வட்டத்திற்கும் உரிய பணியிட விவரங்களும், இனச்சுழற்சி ஒதுக்கீட்டும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ அல்லது தோல்வியடைந்தவராகவோ இருக்கலாம். மேலும், அந்தந்த தாலுகா பகுதியில் வசிப்பவராகவும், தமிழில் தெளிவாகப் படிக்கவும் எழுதவும் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட பணியிடப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த அக்கிராம பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

உடற் தகுதி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி / இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர் மீது எவ்வித வழக்கு நிலுவையில் இருக்க கூடாது.

விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தது 21 ஆகவும், அதிகபட்சம் 32 ஆகவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தை https://chennai.nic.in/recruitment-of-village-assistant-post-2025/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச்சான்றிதழ்கள், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, வரும் அக்டோபர் 1ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வழங்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com