

புதுடெல்லி,
மத்திய அரசில் உயரிய பணியிடங்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யுபிஎஸ்சி நிரப்பி வருகிறது. அரசு விதிகளின் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இந்த காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 480 காலியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு;
தேர்வு நடத்தும் நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி)
காலி பணி இடங்கள்: 480 (ESE)
கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி.
வயது வரம்பு: : 1-1-2027 அன்றைய தேதிப்படி 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 2-1-1997-க்கு முன்போ, 1-1-2006-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு, நேர்காணல்
தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, மதுரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 6-10-2026
கூடுதல் விவரங்களுக்கு : https://upsc.gov.in/