என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு எப்போது தொடங்கும்?

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு மே 2-வது வாரம் முதல் தொடங்கும்.
Image credits: AI
Image credits: AI
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் இளநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு சுமார் 1.7 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, 2026-27-ம் ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் மூலம் வரும் ஜூலை மாதம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு அடுத்த மாதம் (மே) 2-வது வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, 'என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு மே 2-வது வாரம் முதல் தொடங்கும். விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதம் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூலை மாதம் கலந்தாய்வு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கான கால அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியாகும்' என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com