சென்னை ஆதி திராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை ஆதி திராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னை ஆதி திராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை,

சென்னை வளசரவாக்கம் அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளியில், 2 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம், வடபெரும்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளியில் ஒரு இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் என மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் உள்ளன.

காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக ரூ,12 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பள்ளிக்கல்வி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு, டெட் முதல் தாள் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவோ, பதிவு தபால் மூலமாகவோ வருகிற 19-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அளிக்கலாம் என்றும் மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com