நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்வு 380 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்வு 380 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்வு 380 காசுகளாக நிர்ணயம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 360 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை விலை 380 காசுகளாக உயர்ந்துள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-400, ஐதராபாத்-315, விஜயவாடா-332, மைசூரு-375, மும்பை-385, பெங்களூரு-375, கொல்கத்தா-400, டெல்லி-340.

கறிக்கோழி கிலோ ரூ.111-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. பிற மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருவதால், அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com