

மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த குச்சிக்காடு என்ற இடத்தில் உள்ள முந்திரி தோப்பில் ஆண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர் புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 80) என தெரியவந்தது. அவரை தீவைத்து எரித்து கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை. கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.