முதியவர் விஷம் குடித்து தற்கொலை

பாளையங்கோட்டை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 67). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட மாரிமுத்து சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com