கோத்தகிரி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

கோத்தகிரி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோத்தகிரி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 68). கூலித் தொழிலாளி. இவருக்கு லட்சுமியம்மாள் (வயது 62) என்கிற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் கடந்த ஒரு வார காலமாக தீராத நெஞ்சு வலியால் அவதிப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com