பாதுகாப்பு உபகரணம் இன்றி கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்த முதியவர்கள்

அரியாங்குப்பம் அருகே பாதுகாப்பு உபகரணம் இன்றி கழிவுநீர் வாய்க்காலை முதியவர்கள் சீரமைத்தனர்.
பாதுகாப்பு உபகரணம் இன்றி கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்த முதியவர்கள்
Published on

அரியாங்குப்பம்

புதுச்சேரி -கடலூர் கிழக்கு கடற்கரை சாலையில் தவளக்குப்பம் போக்குவரத்து சிக்னல் அருகில் சாலையோர கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையோரம் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் இருந்து தனியார் திருமண மண்டபம் வரை வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

கையுறை, காலூறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி முதியவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ள அவலம் அரங்கேறி உள்ளது. இதனால் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com