முதியவர் தற்கொலை

கோட்டுச்சேரியை அடுத்த ராயன்பாளையத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை
முதியவர் தற்கொலை
Published on

கோட்டுச்சேரி

கோட்டுச்சேரியை அடுத்த ராயன்பாளையம் கூல் குடித்த அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பந்தமூர்த்தி (வயது 72). நேற்று  வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகே தோட்டத்தில் உள்ள கழிப்பறையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோட்டுச்சேரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com