விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

திருபுவனை அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டா.
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
Published on

திருபுவனை

திருபுவனை அருகே பி.எஸ்.பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அங்காளன். இவரது மனைவி இந்திராணி (வயது72). கணவர் இறந்த பின்னர், தனது மகள் தமிழ்மொழி பராமரிப்பில் இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீடு கட்டுமான பணியின்போது இந்திராணி தவறி விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. மேலும் அவருக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதனால் அவதிப்பட்டு வந்த இந்திராணி இன்று பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com