

திருக்கனூர்
திருக்கனூர் லயன்ஸ் சங்கத்தின் 2023-24-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் புதிய தலைவராக திருக்கனூர் அசார் என்கிற முகமது அசாருதீன், செயலாளராக மண்ணாடிப்பட்டு இளங்கோவன், பொருளாளராக திருக்கனூர் செல்வகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில், திருக்கனூர் லயன்ஸ் சங்கத்துக்கு கண்தானம் செய்த கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜம்மாள், கன்னியம்மாள் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.