மின்வாரிய ஊழியர் சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலியானார்.
மின்வாரிய ஊழியர் சாவு
Published on

முக்கூடல்:

முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரத்தை சேர்ந்தவர் பண்டாரம் (வயது 51). இவர் கோபாலசமுத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 24-ந் தேதி தனது வீட்டு மாடியில் இருந்து பேசிக் கொண்டிருந்த பண்டாரம் திடீரென கீழே தவறி விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவர் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பண்டாரம் பரிதாபமாக இறந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com