மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பாதாபமாக உயிழந்தா.
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
Published on

புதுச்சேரி,

புதுவை தட்டாஞ்சாவடி சுப்பையா வீதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் சுதர்சன் (வயது 18). எலக்ட்ரீசியன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், திருவள்ளுவர் சாலையில் உள்ள செல்போன் கடையில் ஏ.சி. எந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. அவர் அணிந்திருந்த சட்டையும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அலறி துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com