மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மின்துறை ஊழியர்கள் காரைக்கால் தலைமை மின்துறை அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

காரைக்கால்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காலிப்பணியிடம்

மின்துறையில் காலியாக உள்ள மேல்நிலை மற்றும் கீழ் நிலை ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறிப்பாக, 189 கட்டுமான உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த 14 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள டெஸ்டர் பதவியினை உடனே நிரப்பவேண்டும்.

2006-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களைவிட, 2011-ல் சேர்ந்த ஊழியர்கள் அதிகம் சம்பளம் வாங்கும் முரண்பாடுகளை நீக்கவேண்டும். யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசின் முடிவைக் முழுமையாக கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி காரைக்கால் தலைமை மின்துறை அலுவலக வாயிலில் இன்று மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோஷம்

ஆர்ப்பாட்டத்திற்கு, மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் வேல் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

மேலும், மின்துறை ஊழியர்களின் கோரிக்கையை போர்க்கால அடிப்படையில் நிரப்பாவிட்டால், காரைக்காலில் உள்ள அரசு ஊழியர்கள் நலசங்கஙக்ளை ஒன்று திரட்டி, மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com