உயரமான கிரிக்கெட் மைதானம்

உயரமான கிரிக்கெட் மைதானம்
Published on

உலகின் மிக உயரமான கிரிக்கெட் மைதானம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சைல் என்ற மலைவாசஸ்தலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 1893-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானம் கடல் மட்டத்தில் இருந்து 7,500 அடி உயரத்தில் உள்ளது. சட்லஜ் பள்ளத்தாக்கு, சிம்லா மற்றும் கசவுலி ஆகியவற்றின் அற்புதமான காட்சிகளை இரவில் பார்வையாளர்கள் இங்கிருந்து கண்டுகளிக்கலாம்.

இந்த மைதானத்தை கிரிக்கெட் பிரியரான பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் உருவாக்கினார். மேலும் கூடைப்பந்து மைதானமும், கால்பந்து விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும் கோல் கம்பங்களும் அமைந்துள்ளன. பல சர்வதேச மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளன.

பனிப்பொழிவுக்குப் பிறகு குளிர்காலத்தில் கிரிக்கெட் மைதானம் மூடப்பட்டிருக்கும் என்றாலும், மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் கிரிக்கெட் விளையாடுவது இனிமையான அனுபவமாக இருக்கும். இங்கு வெப்பநிலை 15 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை நிலவும். அடல் சுரங்கப்பாதை திறக்கப்பட்ட பிறகு புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் இந்த மைதானம் உருவாகியுள்ளது.

-சுரேஷ், 12-ம் வகுப்பு, நகராட்சி நடுநிலைப்பள்ளி, அம்பத்தூர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com