சரக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பலி

சரக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் உயிரிழந்தார்.
சரக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பலி
Published on

பெரம்பலூர்:

சிவில் என்ஜினீயர்

பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மணிகண்டன் என்ற மனோ(வயது 23). சிவில் என்ஜினீயரான இவர் கட்டிடம் கட்டிக்கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்பாடி பிரிவு சாலையை தாண்டி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே சாலையில் முன்னால் ஒரு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அதன் டிரைவர் எவ்வித சிக்னலும் காட்டாமல் சாலையின் இடதுபுறம் சென்று திடீரென்று வாகனத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் சரக்கு வாகனத்தின் பின்னால் மோதியது.

சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சரக்கு வாகன டிரைவரான விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, கள்ளப்புலியூர் கடைவீதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com