வத்தலக்குண்டு அருகே என்ஜினீயரிங் பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை

வத்தலக்குண்டு அருகே படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் விரக்தியடைந்த என்ஜினீயரிங் பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வத்தலக்குண்டு அருகே என்ஜினீயரிங் பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை
Published on

வத்தலகுண்டு:

வத்தலக்குண்டு அருகே உள்ள குன்னத்துப்பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது 34). இவருக்கு திருமணமாகி குமுதா என்ற ஒரு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். என்ஜினீயரிங் பட்டதாரியான வீராச்சாமிக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை.

இருப்பினும் விராலிப்பட்டியில் உள்ள ஒரு பழக்கடையில் அவர் வேலை செய்து வந்தார். மேலும் அவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடன் பிரச்சினை மற்றும் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் வீராச்சாமி கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் குன்னத்துப்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com