சூளகிரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பலி

சூளகிரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் கார் மோதி பலியானார். அவருடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.
சூளகிரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பலி
Published on

சூளகிரி:

சூளகிரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் கார் மோதி பலியானார். அவருடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.

என்ஜினீயரிங் மாணவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அழகியபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் புருஷோத்தமன் (வயது 22). இவர், கந்திருப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவர், தனது நண்பரும், பொக்லைன் ஆபரேட்டருமான பாலமுருகன் (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஓசூரில் இருந்து, அழகியபுதூர் நோக்கி சென்றார்.

சூளகிரி அருகே சப்படி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச்சென்ற ஒரு சொகுசு கார், மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது.

பலி

இதில் புருஷோத்தமனும், பாலமுருகனும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் புருஷோத்தமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புருஷோத்தமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தலையில் பலத்த அடிபட்ட பாலமுருகன் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com