தொழில் முனைவோர் பயிற்சி

புதுவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டது.
தொழில் முனைவோர் பயிற்சி
Published on

புதுச்சேரி

இந்தியன் வங்கி, புதுச்சேரி கருணாலயம் கிராம சங்கம், எனேபிள் இந்தியா நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழாவுக்கு கருணாலயம் கிராம நலச்சங்க தலைவர் அங்காளன் தலைமை தாங்கினார். எனேபிள் இந்தியா நிறுவன புதுவை அலுவலர் ஆல்ரிங் டார்விஸ், விமல்ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் அமிர்தவல்லி, புதுவை மாநில மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக இயக்குனர் சாந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். முன்னதாக கருணாலயம் சங்க இணை இயக்குனர் புஷ்பவள்ளி வரவேற்றார். முடிவில் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com