அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள்

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை நகரசபை முன்னாள் தலைவர் ஸ்ரீதர் வழங்கினார்.
அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள்
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் குறிஞ்சி அரிமா சங்கம் மற்றும் கட்டிட கட்டுமானோர் மைய கிளை சார்பில் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது.

இதற்கு கட்டுமானோர் மைய கிளை தலைவர் ராஜேஷ் கண்ணா தலைமை தாங்கினார். செயலாளர் மாரியப்பன், பொருளாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பொன் ரதி வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் நகரசபை முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான எம்.ஸ்ரீதர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கட்டிட கட்டுமானோர் மைய முன்னாள் தலைவர்கள் தனசேகர், சலாமத், ரியாஸ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் குறிஞ்சி அரிமா சங்க தலைவர் பசீர் அகமது நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com