கும்மிடிப்பூண்டியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மகளிர் காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை போராட்டம் நேற்று நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை போராட்டம்
Published on

இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்.பி. எஸ்.ஜோதிமணி, எம்.எல்.ஏ. விஜயதரணி உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாநில தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியின் முடிவில், கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் பேசும்போது, வேளாண் திருத்த சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை என்ற சாராம்சம் இடம்பெற செய்து சட்டமாக்கி விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று கூறினார். 2021-க்கு பிறகு தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பது குறித்த முயற்சிகளில் வேகமாக இறங்குவோம் என்றும்,தமிழகத்துக்கு ராகுல் காந்தி வந்த போது,பாதுகாப்பு வளையங்களை எல்லாம் தாண்டி அவர் பொதுமக்களை சந்தித்தார். ஆனால் தமிழ்நாட்டிற்கு வந்தால் மோடி மக்களை சந்திக்க அச்சப்படுகிறார்.

மோடியை பார்த்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ,பன்னீர்செல்வமும் அஞ்சுகிறார்கள்.எந்த மொழிக்கும் காங்கிரஸ் எதிரானது அல்ல. எல்லா மொழிகளையும் நாம் ஆதரிக்கிறோம். ஆனால் ஒரு மொழியை ஆதரிக்கிறோம் என்பதற்காக இன்னொரு மொழியின் மீது தாக்குதல் நடத்த கூடாது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com