மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

பெரியகுளத்தில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடந்தது.
மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்கரை கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடந்தது. இந்த பாட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதனை வக்கீல் சங்க முன்னாள் தலைவர் சந்திரசேகரன், நல்லாசிரியர் சிவபாலு ஆகியோர் வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார், நிலைய அலுவலர் ஆசியா, பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் நூலக ஆர்வலர் அன்புக்கரசன், வக்கீல் மணி கார்த்திக், என்ஜினீயர் நித்தியானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com