சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் ரூ.152 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கு சொந்தமான ரூ.152 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் ரூ.152 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
Published on

மும்பை, 

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கு சொந்தமான ரூ.152 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

ரூ.560 கோடி முறைகேடு

நவிமும்பையில் பன்வெல் தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விவேக் பாட்டீல் என்ற விவேகானந்த் சங்கர் பாட்டீல். உழவர் உழைப்பாளா கட்சியை சேர்ந்த இவர், கர்னாலா நகரி சகாகாரி வங்கியின் சேர்மனாகவும் இருந்து உள்ளார். இவர் ரூ.560 கோடி வங்கி கடன் முறைகேட்டில் ஈடுபட்டது கடந்த 2019-ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனா. அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விவக் பாட்டீல் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்ந்தனர்.

ரூ.152 கோடி சொத்துக்கள் முடக்கம்

மேலும் 2021-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக விவேக் பாட்டீல் மற்றும் அவரது உறவினர்களின் ரூ.152 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com