சேதமுற்ற நிலையில் பழங்கால பானைகள் கண்டெடுப்பு

கீழடியில் நடந்த 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளின் போது சேதமுற்ற நிலையில் இருந்த பழங்கால பானைகள் கண்டெடுக்கப்பட்டன.
சேதமுற்ற நிலையில் பழங்கால பானைகள் கண்டெடுப்பு
Published on

திருப்புவனம்,

கீழடியில் நடந்த 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளின் போது சேதமுற்ற நிலையில் இருந்த பழங்கால பானைகள் கண்டடுக்கப்பட்டன.

7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. முதலில் கீழடியிலும் பிறகு கொந்தகை, அகரம் பகுதியில் அடுத்தடுத்து அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கீழடியில் 2-வது குழியில் அகழ்வாராய்ச்சி பணி செய்யும் போது சேதமுற்ற நிலையில் சிறிய மண் பானைகளும் சேதமுற்ற நிலையில் சிறிய மண் கிண்ணங்களும், பழங்கால வெள்ளை பாசிகளும் கிடைத்தன.

சேதமுற்ற பானைகள் கண்டெடுப்பு

கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யும் போது முதலாவது குழியில் சேதமுற்ற நிலையில் சிறிய பானையின் வாய்ப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பகுதி சிவப்பு கலரில் உள்ளது.இதே போல் இரண்டாவது குழியில் சேதமுற்ற நிலையில் பழங்கால பெரிய பானையின் அடிப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கருப்பு கலரில் ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் மூன்றாவது குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் பாசி, மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com