கீழடியில், 2 மண்கிண்ணங்கள் கிடைத்தன

கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 2 மண்கிண்ணங்கள் கிடைத்தன.
கீழடியில், 2 மண்கிண்ணங்கள் கிடைத்தன
Published on

திருப்புவனம்,

கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 2 மண்கிண்ணங்கள் கிடைத்தன.

கீழடி

தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற அகழாய்வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டது.

சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி நாகரிகம் உலகிற்கு எடுத்துரைத்து உள்ளது. தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

2 மண்கிண்ணங்கள்

முதலில் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணி ஆரம்பிக்கப்பட்டது. பிறகு கொந்தகையிலும், அகரத்திலும் அடுத்தடுத்து பணிகள் தொடங்கப்பட்டது. கீழடியில் முதல் குழியில் பாசி, மணிகள், சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுக்கள், சிறிய பானைகள், மண்பாண்ட ஓடுகள் கிடைத்தன. மற்றொரு குழியில் சேதமான நிலையில் சிறிய பானைகள், கிண்ணங்கள் மற்றும் மண்பாண்ட ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய வெள்ளை பாசிகள் கிடைத்தன.
இந்த நிலையில் கீழடியில் உள்ள 2 குழிகளில் நேற்று நடந்த அகழாய்வில் மண் கிண்ணங்கள் கிடைத்தன. ஒரு குழியில் கருப்பு சிவப்பு வண்ணங்களுடன் மண் கிண்ணமும், மற்றொரு குழியில் சாதாரண மண் கிண்ணமும் கிடைத்துள்ளது. இந்த 2 மண் கிண்ணங்களும் பழங்கால தமிழர்கள் பயன்படுத்தியவைகள். தொடர்ந்து குழிகள் ஆழமாக தோண்ட, தோண்ட இன்னும் பல பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com