சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
கரூர்
கரூர்
Published on

கரூர்,

கரூரில் நேற்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மாயமலை வேலை அறிக்கையும், மாநில பொருளாளர் ஆனந்தவல்லி வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் 9.05.2022 அன்று ஓய்வூதியர் நலன் மானியக் கோரிக்கை தினத்தில் 200 மையங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. 2022-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மாநில மாநாடு நடத்துவது. குறைந்தபட்ச பென்சன் ரூ.7 ஆயிரத்து 850, குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும், மாநில மாநாட்டிலும் வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com