

அவற்றை தக்க பாடமாக எடுத்து கொண்டு செயல்படுவதன் மூலம் பல சிக்கல்களை தவிர்க்க இயலும். அவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள், பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு அவர்கள் எப்படி தீர்வு கண்டார்கள் என்பதை அவர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வதுடன், கட்டி முடித்துள்ள வீடுகளுக்கு சென்று பார்த்து, செலவு தொகை, அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை கேட்டறிவது நல்லது. அதன் மூலம் கட்ட உள்ள வீட்டின் பிளிந்த் ஏரியா பகுதியின் ஒரு சதுர அடிக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பது தெரியவரும்.