வழக்கறிஞராக நடித்த அனுபவம்!

கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த `அடங்க மறு,' அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திகில் படம். இதில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, வழக்கறிஞராக முக்கிய வேடத்தில் பூர்ணா நடித்து இருக்கிறார்.
பூர்ணா
பூர்ணா
Published on

அந்த அனுபவம் பற்றி பூர்ணா கூறும்போது, ``வழக்கறிஞராக நடித்தது ஒரு எளிமையான விஷயம் அல்ல. முதன்முதலாக ஒரு கோர்ட்டு அரங்குக்குள் நுழைந்தபோது பதற்றம் ஏற்பட்டது உண்மை. இந்த கதாபாத்திரத்தின் உடல் மொழி, உரையாடல் ஆகியவற்றில் ஒரு நேர்த்தி தேவைப்பட்டது. அதற்காக ஒத்திகை பார்த்துக் கொண்டபின்தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்'' என்றார்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com