முகநூல் நண்பர்களின் காரை; இரவல் வாங்கி விற்றவர் சிக்கினர்

முகநூல் நண்பர்களின் காரை இரவல் வாங்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
முகநூல் நண்பர்களின் காரை; இரவல் வாங்கி விற்றவர் சிக்கினர்
Published on

பெங்களூரு:

பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட விமனபுரா பகுதியில் வசித்து வருபவர் அருண்தாஸ். தொழில் அதிபர். இவர் முகநூல் மூலம் சரண்ராஜ்(வயது 33) என்பவரிடம் நண்பராக பழகினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அருண்தாசிடம் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. அவரை

ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டி உள்ளது என்று கூறி அருண்தாசின் காரை சரண்ராஜ் எடுத்து சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதுபற்றி எச்.ஏ.எல். போலீசில் அருண்தாஸ் புகார் அளித்தார். புகாரின்பேரில் சரண்ராஜை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரண்ராஜை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சரண் ராஜ் முகநூல் நண்பர்கள் சிலரிடம் பல்வேறு காரணங்களை கூறி கார்களை வாங்கி சென்று அவற்றை விற்றது தெரியவந்தது. கைதான சரண்ராஜிடம் இருந்து 8 கார்கள், 3 கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைதான சரண்ராஜ் மீது எச்.ஏ.எல். போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சரண்ராஜ் ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com