சவால்களை சந்தித்தாலும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார் - இயக்குனர் பாக்யராஜ்

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் நிகில் முருகன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் பவுடர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சவால்களை சந்தித்தாலும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார் - இயக்குனர் பாக்யராஜ்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி மக்கள் தொடர்பாளராக வலம் வரும் நிகில் முருகன் நாயகனாக நடித்திருக்கும் படம் பவுடர். இப்படத்தில் மோகன், குஷ்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜீ மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா படக்குழு உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழால் கலந்து கொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது, "இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய தயாரிப்பாளர் ஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகள். நிகில் முருகன் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், அதை எப்போதும் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார். நடிகராக புது அவதாரத்தின் மூலம் அவர் வெற்றியைக் காணுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் வசந்த் பேசியதாவது, "நிகில் எப்போதும் புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருப்பார், மேலும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார். அவர், தனது கடின உழைப்புக்காகவும் அதனை வெற்றிகரமாக மாற்றுவதிலும் வல்லவர் ஆவார். கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து தனது வெற்றியை நிரூபித்து வருகிறார். படத்தின் டிரெய்லர் நம்பிக்கை தருகிறது, மேலும் இந்த படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com