உணவு அறைக்கு தேவையான வசதிகள்

உணவு உண்ணும் அறையான ‘டைனிங் ஹாலில்’ பயன்படுத்தப்படும் பொருட்களை அடுக்கி வைத்துக்கொள்ளும் அலமாரி பல இடங்களில் இருக்கின்றன.
உணவு அறைக்கு தேவையான வசதிகள்
Published on

வெளிநாடுகளில் உள்ள இம்முறை நமது நாட்டிலும் இப்போது பரவி வருகிறது. தட்டுகள், கரண்டிகள், ஊறுகாய் ஜாடிகள் மற்றும் இதர பொருட்களை கைக்கெட்டும் தூரத்தில் சாப்பிடும் இடத்தில் இருப்பது வசதியாக இருக்கும். இடத்தை அடைத்துக்கொள்ளாமல் சுவரோடு ஒட்டிய மர அலமாரிகள் மற்றும் டைனிங் அறையின் கார்னர் பகுதிகளில் கச்சிதமாக பொருத்த வசதியான கேபினட்டுகள் ஆகியவை இப்போது சந்தையில் கிடைக்கின்றன.

மேலும், சமைத்த உணவு வகைகளை பாதுகாப்பாகவும், எளிதாகவும் எடுத்து வந்து சர்விங் டிராலி மூலம் பரிமாறப்படும் முறை பெரிய வீடுகளில் உள்ளது. உணவு உள்ளிட்ட மற்ற பொருட்களை அதில் வைத்து எடுத்து சென்று பரிமாறும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த சிறிய தள்ளு வண்டி அமைப்பின் மூலம் சுலபமாக உணவை பரிமாற இயலும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com