கட்டணம் செலுத்த தவறினால் மின்சாரம் துண்டிப்பு

கட்டணம் செலுத்த தவறினால் மின்சாரம் துண்டிக்கப்படும் என புதுவை மின்துறை தெரிவித்துள்ளது.
கட்டணம் செலுத்த தவறினால் மின்சாரம் துண்டிப்பு
Published on

புதுச்சேரி

புதுவை மின்துறை பராமரித்தல் பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை மின்துறை கிராமம் வடக்கு கோட்டத்திற்கு கீழ் இயங்கும் வில்லியனூர், பூமியான்பேட், லாஸ்பேட், கோரிமேடு, அசோக் நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனூர், காட்டேரிகுப்பம் உள்ளிட்ட அதை சுற்றியுள்ள பகுதி மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டண பாக்கியை கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், மின்சாரம் துண்டிக்கப்படும். எனவே, கடைசி தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com