தவறி விழுந்த தொழிலாளி சாவு

பாகூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இ்றந்தார்.
தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

பாகூர்

கன்னியகோவில் அடுத்த மதிகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர், தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருமாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com