பிரபல நடிகை தற்கொலை

பிரபல கன்னட நடிகை சவுஜன்யா. இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த சவுஜன்யா திடீர் தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல நடிகை தற்கொலை
Published on

அவர் வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

சவுஜன்யாவுக்கு கடந்த சில மாதங்களாக நடிப்பதற்கு வாய்ப்புகள் வராததால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை முடிவை எடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

சவுஜன்யாவுடன் நடித்த நடிகர் நடிகைகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்வதற்கு முன்னால் சவுஜன்யா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் மட்டுமே பொறுப்பு. என்னை பெற்றோர் மன்னிக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளால் மனதளவில் பாதித்து தற்கொலை முடிவை எடுத்துள்ளேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com